UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நேற்று மாநகராட்சி பகுதிகளில் 30 பேர், புறநகர் பகுதிகளில் 20 பேர் என 50 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 120 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. நேற்று காலையில் இருந்தே சிறிது மழைத்துாறலுடன் இதமான சூழ்நிலை நிலவியது. இரவில் பனியின் தாக்கம் காணப்படுவதால் சளி, காய்ச்சல் பிரச்னையால் பாதிக்கப்படுவோர் அதிகரித்துள்ளனர்.
