UPDATED : அக் 26, 2026 07:12 PM
ADDED : அக் 26, 2026 07:08 PM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கமிஷனர் கவுரவ்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநகராட்சி பொது சுகாதாரப்பிரிவு மூலம் வடகிழக்கு பருவ மழையை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் மழை அதிகரிக்கும் சூழல் உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் மக்கள் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகள், வயதானோருக்கு காய்ச்சல் பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொசு உற்பத்தி ஆதாரங்களை தொடர்ந்து அழித்து வருகின்றனர். மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 10:00 – மதியம் 2:00 மணி வரையிலும், நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மதியம் 2:00 – மாலை 4:00 மணி வரையும் தேவைக்கு ஏற்ப காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
