UPDATED : மே 08, 2026 08:33 PM
ADDED : மே 08, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) விளையாட்டு விடுதியில் மாணவிகள் சேர்க்கைக்கான தடகள, குழு விளையாட்டுகளுக்கான தேர்வு நடந்தது
தடகளம், கூடைபந்து, ஹாக்கி, வாலிபால், கபடிக்கான போட்டி தேர்வில் 6 முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 உட்பட 62 மாணவிகளே பங்கேற்றனர். அனைவருமே மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர். ஹேண்ட்பால் போட்டிக்கான தேர்வு இருந்தாலும் மாணவிகள் யாரும் பங்கேற்கவில்லை. நேற்று முன்தினம் மாணவர்களுக்கு நடந்த தேர்வு போட்டியில் 400 பேர் பங்கேற்றனர். அதில் 374 பேர் தேர்ச்சி பெற்றனர்.
