தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வயல்வெளி பயிற்சி பள்ளி துவக்க விழா

வயல்வெளி பயிற்சி பள்ளி துவக்க விழா

வயல்வெளி பயிற்சி பள்ளி துவக்க விழா


ADDED : அக் 30, 2025 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: புதுக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் உழவர் வயல் வெளி பயிற்சி பள்ளி துவக்க விழா நடந்தது.

வேளாண் இணை இயக்குனர் முருகேசன் துவக்கி வைத்தார். மத்திய திட்டங்கள் துணை இயக்குனர் ராணி, விஞ்ஞானி ஞான அருள் சாமுவேல் ராஜன் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றம் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.

ஆறு வாரம் நடக்கும் இம்முகாமில் நெல் விதை நேர்த்தி முதல் அறுவடை வரை நேரடி களப் பயிற்சி அளிக்கப்படும். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

வேளாண் அலுவலர் அருள் நவமணி விஜயபாரதி, துணை அலுவலர் பாரதி, உதவி அலுவலர் மனோகரன் செயல் விளக்கம் அளித்தனர்.

அட்மா திட்டம் லதா, அழகர், மகாலட்சுமி முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us