ADDED : மார் 16, 2026 05:26 AM
மதுரை: கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா, உலக பை (கணக்கு) தினம், பரிசளிப்பு விழா, உலக மகளிர் தினம் ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடந்தன.
வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் வரவேற்றார்.
அறிவியல் கண்காட்சியில் ராக்கெட், 'சோலார்' படகு, பன்முக எதிரொளிப்பு, உள்ளிட்ட அறிவியல் மாதிரிகளை மாணவர்கள் செய்து காட்டினர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சேது, ஆசிரியர் சிவ பார்வதி பேசினார். அதிக மதிப்பெண், விளையாட்டில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக மகளிர் தினம் குறித்து ஆசிரியை அருவகம் பேசினார்.
சிறப்பு பயிற்றுநர் அமலஜோசப், வானவில் மன்ற பொறுப்பாளர் பாண்டிச் செல்வி, மேலாண்மைக் குழு தலைவர் தஸ்லிம் பானு பங்கேற்றனர். ஆசிரியர்கள் சுகுமாறன், அனுசியா, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, ராணி ஏற்பாடு செய்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
