/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் ரோப்கார் இறுதிகட்ட ஆய்வு
/
குன்றத்தில் ரோப்கார் இறுதிகட்ட ஆய்வு
ADDED : செப் 25, 2024 03:49 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் 2023 ஆகஸ்ட் மாதம் மலைக்கு பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப் கார் அமைக்க சென்னை ஐ.டி., காட் நிறுவனத்தினர் சர்வே செய்தனர். ரோப்கார் அமைவுள்ள இடம், உயரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய ஹரியானா ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எக்னாமிக் சர்வீசஸ்(அர்.ஐ.டி.இ.எஸ்.,), ரோப்வே டிவிஷன் வாப்காப்ஸ் லிட்., மும்பை இந்தியன் போர்ட் ரயில்வே அண்ட் ரோப்வே கார்ப்பரேஷன் லிட்., அடங்கிய குழுவை அறநிலையத்துறை அமைத்தது.
தற்போது அர்.ஐ.டி. இ.எஸ்., நிறுவனம் ரோப்கார் அமைக்க உள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. நேற்று அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சதீஷ்குமார் வர்மா, மேலாளர் வெங்கடேசன், பொறியாளர் மாசிமலை ஆய்வு செய்தனர். சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி உடனிருந்தனர்.