ADDED : ஜூன் 24, 2025 03:40 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: விரிசங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 17 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று மதியம் சாப்பாடு தயாரிக்கும் பணியில் சமையலர் தாயம்மா ஈடுபட்டிருந்தபோது காஸ் கசிவால் சிலிண்டரில் தீப்பிடித்தது.
திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் அணைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா, வி.ஏ.ஓ., செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
