ADDED : மார் 03, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே மேலமாத்துார் காமாட்சிபுரத்தில் புதிதாக காமாட்சி அம்மன் கோயில் கட்டப்படுகிறது. முன்னாள் ஊராட்சி தலைவர் கருப்பையா வரி வசூல் செய்து பணிகளை செய்து வருகிறார்.
புதிய கட்டடம் அருகே குடிசையில் அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களும் இருந்த நிலையில் நேற்று அதிகாலை சிலர் குடிசைக்கு தீ வைத்தனர். இதில் குடிசை முழுவதும் தீ பரவியதில் ஆவணங்கள் எரிந்தன. வெண்கல சிலைகள் கருகின. வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர்.

