/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கோட்ட ரயில்வே வளாகத்தில் தீ விபத்து
/
மதுரை கோட்ட ரயில்வே வளாகத்தில் தீ விபத்து
ADDED : மே 30, 2025 03:50 AM
மதுரை: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் சாம்பலாகின.
இவ்வலுவலகத்தில் முதுநிலை கோட்டப் பொறியாளர் முக்கிய அலுவலகங்கள் உள்ளன. பணியாளர்களின் விவரங்கள், சம்பளம் உள்ளிட்ட பழமையான ஆவணங்கள் போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ள அறையில் பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் அறையில் இருந்து புகை வந்தது. ஆவணங்கள் அனைத்தும் எரிந்தன. கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் விசாரணை நடக்கிறது. மின்கசிவு காரணமாக தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
ரயில்வே தரப்பில் கூறுகையில், ''ஐந்தாண்டுகளுக்கு முன் மின்னணு கோப்புகளுக்கு (இ-பைல்) மாற்றமடைந்தபோதே பழைய கோப்புகளில் உள்ள முக்கிய ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றப்பட்டுவிட்டன. கொரோனாவிற்கு பின் திட்டங்கள், பணியாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் கணினியிலேயே பதிவேற்றம் செய்யப்படுகின்றன'' என்றனர்.