ADDED : அக் 21, 2025 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விளாங்குடி அருகே காமாட்சி நகர் பகுதியில் பாண்டி என்பவருக்குச் சொந்தமான பழைய பொருட்களை அடுக்கிவைக்கும் கோடவுன் உள்ளது.
இங்கு நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறிய சிலநிமிடங்களில் கோடவுனின் அனைத்துப் பொருட்களிலும் தீ பற்றி எரியத் தொடங்கியது. தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தால் ரூ.20 லட்சம் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. கூடல் புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.