ADDED : நவ 22, 2026 06:25 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஆலங்குளம் வேல்சாமி என்பவரின் பிளாஸ்டிக் கோடவுன், செல்லுார் பூந்தமல்லி நகர் ரோட்டில் உள்ளது.
நேற்று மதியம் கோடவுனில் தீப்பிடித்து புகை வெளியேறியது. தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விடுமுறை நாள் என்பதால் உயிர் சேதம் இல்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
