ADDED : பிப் 08, 2026 06:51 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நகராட்சி மின்மயான குப்பை கிடங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட தீயை நகராட்சி நிர்வாகத்தினர் கட்டுப்படுத்த தவறியதால், ஒருவாரமாக எரிந்து வருகிறது. பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பு, நெல்வயல்கள் இந்த தீயால் பாதிப்படைந்தன. நேற்று கோபமடைந்த மக்கள் நகராட்சி பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டினர். குப்பையை ஏற்றி வந்த வாகனங்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
எஸ்.ஐ., துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் சமரசம் செய்து பணியாளர்களை மீட்டனர்.
சப்கலெக்டர் உட்கர்ஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். நகராட்சிப் பணியாளர்களே குப்பைக்கு தீ வைப்பதாக மக்கள் புகார் செய்தனர். நகராட்சி கமிஷனர் இளவரசன், மர்ம நபர்கள் தீ வைப்பதாக தெரிவித்தார். தீயை அணைப்பதற்கும், வெளி நபர்கள் உள்ளே வராமல் தடுக்க வேலி அமைக்கவும், சுற்றுப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் உட்கர்ஷ்குமார் அறிவுறுத்தினார்.
