ADDED : செப் 20, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வண்டியூர் சங்கு நகரில் அப்துல் சபார் என்பவரின் பழைய பிளாஸ்டிக் கோடவுன் உள்ளது.
பொருட்களை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோடவுனில் தீப்பிடித்தது. கூடுதல் தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் தல்லாகுளம், அனுப்பானடி நிலைய தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் தீப்பிடித்ததா அல்லது வடமாநில தொழிலாளர்களில் யாராவது சிகரெட் துண்டுகளை வீசியதால் தீப்பிடித்ததா என அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.