/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி
/
எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி
எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி
எல்.ஐ.சி., அலுவலகத்தில் தீ மேலாளர் உடல் கருகி பலி
ADDED : டிச 18, 2025 01:46 AM
மதுரை: மதுரையில் எல்.ஐ.சி., அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், கிளை மேலாளர் உடல் கருகி இறந்தார்.
மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே, மேலவெளி வீதியில் எல்.ஐ.சி., அலுவலகம் செயல்படுகிறது. நேற்று இரவு 8:30 மணிக்கு மேல் பணியாளர்கள் வெளியேறிய நிலையில், கிளை மேலாளர் கல்யாணி நம்பி, 55, உதவி நிர்வாக அலுவலர் ராமு, 32, ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, 'ஏசி'யில் ஏற்பட்ட மின் கசிவால் பற்றிய தீ, அனைத்து அறைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், நான்கு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு சென்று , இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில், கல்யாணி நம்பி உடல் கருதி உயிரிழந்தார்; ராமு பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் கருகின. போலீசார் விசாரிக்கின்றனர்.

