ADDED : ஆக 08, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை: உசிலம்பட்டி தீயணைப்புத்துறை சார்பில் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலினாள் பாய் தலைமையில் நடந்தது.
தீயணைப்பு அலுவலர் ஜீவா மற்றும் வீரர்கள் தீ ஏற்படும் விதங்கள், எந்த விதத்தில் அணைப்பது, காஸ் சிலிண்டரில் தீ பரவவிடாமல் தடுக்கும் வழிமுறைகள், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, முதலுதவி வழங்குவது குறித்து செய்து காட்டினர். உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

