ADDED : மார் 25, 2026 11:34 PM

மதுரை: மதுரை உத்தங்குடி ப்ரீத்தி பல்நோக்கு மருத்துவமனையில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவுபடி தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
வாரந்தோறும் ஒரு உயர்மாடி கட்டடத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்து வருகிறது. ப்ரீத்தி மருத்துவமனையில் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது போன்று 'செட்டப்' செய்யப்பட்டு அங்கேயுள்ள அனைத்து தீத்தடுப்பு சாதனங்களும் எவ்வாறு பயன்படுகிறது என்பது தொடர்பாக தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
முதல் மாடியில் மயக்கமுற்ற நபரை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். அதேபோல் மாடியில் வெளியேற வசதி இல்லாதபோது துணிகளை கொண்டு எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்தும் செய்து காட்டினர். தென்மண்டல துணை இயக்குனர் குமார், மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், உதவி மாவட்ட அலுவலர்கள் திருமுருகன், சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
