நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தீயணைப்பு நிலையத்தில் தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீயணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் (பொறுப்பு) மணி தலைமை வகித்தார். தீ விபத்து ஏற்படும் போது
விரைந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபடவும், அதிகளவில் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்தும், விரைந்து எளிய முறையில் தீ அணைக்கும் அடிப்படை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

