தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விறகு விலை உயர்வு தொழிலாளர்கள் 'பிஸி'

 விறகு விலை உயர்வு தொழிலாளர்கள் 'பிஸி'

 விறகு விலை உயர்வு தொழிலாளர்கள் 'பிஸி'


ADDED : மார் 16, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறையால் விறகுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விறகு வெட்டும் தொழிலாளர்கள் பிஸியாகி உள்ளனர்.

தமிழகத்தில் வணிக காஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறையை சமாளிக்க ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரித்து உள்ளது. பேரையூர் பகுதியில் தனியார் நிலங்கள், ஓடை உடைப்புகளில் சீமைக் கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சீமை கருவேல மரங்களை தொழிலாளர்கள் வெட்டி விலைக்கு விற்று வந்தனர். சமீபகாலமாக இந்த மரங்களை வெட்டி விற்றாலும் கூலிக்கு கூட விலை கிடைக்கவில்லை என்று பலர் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறினர்.

வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறையால், தற்போது விறகு விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் சீமைக் கருவேலம் விறகு ஒரு டன் ரூ.4 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் விறகு வெட்டும் தொழிலாளர்கள் மீண்டும் சீமைக் கருவேலை மரங்களை வெட்டும் தொழிலுக்கு வந்துள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளர்களும், விறகு வெட்டும் வேலைக்கு செல்கின்றனர். இப்பகுதி சீமை கருவேல மரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us