நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மதுரை அப்போலோ நர்சிங் கல்லுாரி முதலாண்டு மாணவியருக்கு முதலுதவி பயிற்சி முகாம் 6 நாட்கள் நடந்தது.
முதல்வர் ஹெலன் பெடிட்டா தலைமை வகித்தார். துணை முதல்வர் சொர்ணமலர் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மதுரை மாவட்ட கிளை செயலாளர் ராஜ்குமார் பேசினார். டாக்டர் பிரவீன் முன்னிலையில் செஞ்சிலுவை சங்க உதவி பயிற்றுனர்கள் பெஞ்சமின், சுதர் அடிப்படை முதலுதவி, சி.பி.ஆர்., கட்டுப்போடுதல், பாம்பு, நாய்க்கடி சமயத்தில் செய்ய வேண்டியவை குறித்து பயிற்சி அளித்தனர்.

