/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
/
போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி
ADDED : ஜன 31, 2026 06:33 AM
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், மாவட்ட எஸ்.பி., அரவிந்த் முயற்சியில் மருத்துவ அவசர நிலைகளின்போது பொதுமக்களின் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் மேற்பார்வையில் டாக்டர் சுபாஷ் சந்திரன் முன்னிலையில் அவசர சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் நரேந்திர நாத் ஜெனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பயிற்சி அளித்தனர். எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர்கள், ஆயுதப்படை போலீசாருக்கு, மாரடைப்பு ஏற்படும்போது வழங்கப்படும் சி.பி.ஆர்., சிகிச்சை, அடிப்படை உயிர் ஆதரவு சிகிச்சை, தானியங்கி இதய அதிர்வு கருவியை கையாளும் முறை, அவசர காலங்களில் செயல்படும் முறைகள் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 1500 போலீசாருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மருத்துவமனை பொதுமேலாளர் சிவக்குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் செய்திருந்தனர்.

