/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியருக்கு முதல் பரிசு
/
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியருக்கு முதல் பரிசு
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியருக்கு முதல் பரிசு
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியருக்கு முதல் பரிசு
ADDED : டிச 08, 2024 05:40 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி கதிர்வீச்சு இயற்பியல் உதவி பேராசிரியர் செந்தில்குமார் எழுதிய கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை தேசிய அளவில் சிறந்ததாக முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மங்களூர் கஸ்துாரிபா மருத்துவக் கல்லுாரியில் கதிரியக்க புற்றுநோய் நிபுணர்களின் தேசிய சங்கம் சார்பில் மாநாடு நடந்தது. இதில் செந்தில்குமார் எழுதிய ஆராய்ச்சி கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. அவர் கூறியதாவது: 3டி பிரின்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தீர்வு மூலம் மேம்பட்ட கதிர் வீச்சு சிகிச்சை என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தேன்.
புதிய தொழில்நுட்பம் மூலம் கதிர்வீச்சு சிகிச்சையின் துல்லியம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மேம்படுகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைக்கேற்ப கதிர்வீச்சு உதவிப்பொருட்களை வடிவமைக்க முடியும். புற்றுசெல்களின் இலக்கை மேம்படுத்தி கதிர்வீச்சு செய்வதன் மூலம் ஆரோக்கியமான திசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் சவுர்யா பானர்ஜி பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதுவரை 50 மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள், 216 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளேன் என்றார். கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.