தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மீன்வளர்ப்பு குழுவினருக்கு மீன்வளத்துறை பயிற்சி

மீன்வளர்ப்பு குழுவினருக்கு மீன்வளத்துறை பயிற்சி

மீன்வளர்ப்பு குழுவினருக்கு மீன்வளத்துறை பயிற்சி


ADDED : பிப் 13, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (நிபாட்) சார்பில் மதுரையில் வண்ணமீன் வளர்ப்பு குழுவினருக்கான அலங்கார மீன்வளர்ப்பு மதிப்பு கூட்டல் கருத்தரங்கு நடந்தது.

மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவராமசந்திரன் வரவேற்றார். டி.ஆர்.ஓ. சக்திவேல் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வள பல்கலை உதவி பேராசிரியர் ஆனந்த் அலங்கார மீன் வளர்ப்பில் சமீபத்திய முன்னேற்றம் குறித்து பேசினார். நிபாட் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர் கமல்ராஜ் பேசியதாவது: இந்தியாவில் 5 தேசிய கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவில் 'சீ வீட்', ஜார்க்கண்டில் முத்துகள் வளர்ப்பு, அந்தமான் நிகோபாரில் டுனா மீன் வளர்ப்பு, சிக்கிமில் ஆர்கானிக் மீன்கள் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும். முதலாவதாக மதுரையில் வண்ணமீன் வளர்ப்பு குழுவினருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.

தமிழகத்தில் வண்ணமீன்களின் நிலை, விற்பனை குறித்து மீன்வளத்துறை துணை இயக்குநர் காசிநாத பாண்டியன் பேசினார். நபார்டு வங்கி உதவிப்பொதுமேலாளர் சக்திபாலன் மீன்வளர்ப்பு குழுவினருடன் கலந்துரையாடினார். ஆய்வாளர் முருகேசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us