ADDED : ஜன 24, 2026 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: முன்னமலைபட்டி ரவிச்சந்திரனை நேற்று முன் தினம் இரவு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இவ்வழக்கில் நேற்று போலீசார் வெள்ளரிப்பட்டி விஜய் சுந்தர் 30, மலையாளத்தான் பட்டி கணேஷ் குமார் 30, காயாம்பட்டி பிரசாந்த் 35, முசுண்டகிரி பட்டி அஜித்குமார் 27, ஆண்டிச்சாமி 32 ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
விசாரணையில் ரவிச்சந்திரன் வீட்டில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்து வந்தார். அவரிடம் விஜய் சுந்தர் பணத்தை குறைவாக கொடுத்துவிட்டு மதுபாட்டில் வாங்கிச் செல்லவே ரவிச்சந்திரன் சத்தம் போட்டார். இவ் முன் விரோதம் காரணமாக விஜய்சுந்தர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

