/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலில் நாளை கொடியேற்றம்
/
குன்றத்து கோயிலில் நாளை கொடியேற்றம்
ADDED : நவ 24, 2025 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நாளை (நவ.25) காலை 10:40க்கு மேல் 11:05 மணிக்குள் நடக்கிறது.
இன்று மாலை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது. திருவிழா நடக்கும் டிச. 4 வரை தினம் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா வருவர். டிச. 3 மாலை மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.

