ADDED : டிச 22, 2025 09:54 AM

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் தர்காவில், நேற்று இரவு சந்தனக்கூடு கொடியேற்று விழா நடந்தது. வழக்கமாக கொடியை வண்டியில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் எடுத்து சென்று, மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் ஏற்றுவர்.
ஆனால், தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதித்ததால், சந்தனக்கூடு கொடியேற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இந்நிலையில், நேற்று இரவு 9:45 மணிக்கு, மலை மேல் உள்ள கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி ஏற்றப்பட்டது.
இதற்கு, 'அவர்களை கொடியேற்ற அனுமதித்துள்ளீர்கள்; நாங்களும் தீபம் ஏற்றுவோம்' என, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பெண் ஒருவர் மட்டும் போலீசார் அனுமதியுடன், பழனி ஆண்டவர் கோவில் வாசல் முன், இரவு 10:00 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட்டார்.

