ADDED : ஆக 27, 2026 01:16 AM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலவளவு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட அழகிரி பட்டி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை வலியுறுத்தும் விதமாக போலீஸ் அணிவகுப்பு ஏ.டி.எஸ்.பி., சந்திரகுமார் தலைமையில் நடந்தது.
இதில் டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், சரவணன், சரவண போஸ், சசிகலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அழகிரிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வி.எஸ்.,நகரம் வழியாக மேலவளவு வரை கொடி அணிவகுப்பு நடந்தது.
