ADDED : மார் 11, 2024 06:02 AM
அ நிறம் | அளவு
மேலுார்: திருவாதவூர் திரவுபதையம்மன் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் மார்ச் 19 திருக்கல்யாணம், மார்ச் 23 ல் அர்ச்சுனன் தவசு, மார்ச் 24 அம்மன் கூந்தல் விரிப்பு, மார்ச் 25ல் கூந்தல் முடிப்பு, மார்ச் 26 பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலுார், திருவாதவூர், உலகுபிச்சன் பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வர்.
