ADDED : பிப் 02, 2026 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: செம்மினிப் பட்டி ஆண்டிபாலகர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவிழா நடந்தது.
சாமியாடி பால்குடம் எடுத்து கோயிலை வந்தடைந்தார். கோயில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். குழந்தை வரம் வேண்டி கிடைக்கப்பெற்றவர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் காணிக்கை செலுத்திய காய்கறிகளைக் கொண்டு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார், செம்மினிபட்டி, கொடுக்கம்பட்டி கிராம பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயிலில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

