தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை விமான நிலையத்தில் மூடுபனி ஒத்திகை நடந்தது

 மதுரை விமான நிலையத்தில் மூடுபனி ஒத்திகை நடந்தது

 மதுரை விமான நிலையத்தில் மூடுபனி ஒத்திகை நடந்தது


ADDED : டிச 14, 2025 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் விமான நிறுவனங்கள், சி.ஐ.எஸ்.எப்., உள்ளிட்ட துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அதிகாலை 4:00 முதல் காலை 10:00 மணி வரை மூடுபனியால் விமான இயக்கங்கள் பாதிப்படைவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இந்தாண்டு ஜன.,யில் மதுரை விமான நிலையத்தில் அதுபோன்ற சூழல் இரண்டு முறை எழுந்தது. திருவனந்தபுரம், துாத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் மதுரை வந்தன. இதனால் மதுரையில் இருந்து சென்னை, பெங்களூரு, டில்லி, ஐதராபாத்திற்கு இயக்கப்படும் விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றன.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மூடுபனியால் விமான போக்குவரத்து தொடர்பான ஒத்திகை நடந்தது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானம் 2 குழந்தைகள் உட்பட 48 பயணிகளுடன் மதுரை வருவதாக தகவல் பெறப்பட்டது. பயணிகளுக்கான தங்குமிடம், உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குழந்தைகள் காப்பகம், போக்குவரத்து, மருத்துவ வசதிகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதுபோன்ற சம்பவங்களில் ஒவ்வொரு துறையினரின் பொறுப்புகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us