ADDED : ஜன 26, 2024 10:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலில் மதுரையின் அட்சய பாத்திரம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு, ரோட்டோரம் உள்ள வறியோர்களுக்கும் , ஆதரவற்றோருக்கும் தொடர்ச்சியாக உணவு வழங்கி வருகிறது. 1000 ஆவது நாட்களை நோக்கி உணவு வழங்கி வரும் இந்த அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோயில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கும் சாலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து உணவு வழங்கினர். தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.

