/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நவ.22 முதல் டிச.3 வரை உணவுத்திருவிழா
/
நவ.22 முதல் டிச.3 வரை உணவுத்திருவிழா
ADDED : நவ 19, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த நவ.22 முதல் டிச.3 வரை 'சரஸ் மேளா' எனும் கண்காட்சி நடக்க உள்ளது. இதையொட்டி உணவுத் திருவிழாவும் நடக்கிறது.
இதில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும். துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். மதுரை, தஞ்சாவூர் பொம்மைகள், ராமநாதபுரம் மாவட்ட கடலோர பொருட்கள், திண்டுக்கல் பிரியாணி, கோவை மட்டன் பிரியாணி, ஜிகர்தண்டா போன்ற பொருட்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

