ADDED : ஜன 18, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள தென்பரங்குன்றம் கல்வெட்டு குகைக்கோயில் பகுதிகளில் குரங்குகளும், மயில்களும் உள்ளன.
பாரத மைந்தர்கள் பண்பாட்டு கழகம் சார்பில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அங்கு பொங்கல் வைத்து, குரங்குகள், மயில்களுக்கு நிலக்கடலை, பொரிகடலை, பழவகைகளுடன் சர்க்கரைப் பொங்கல், தானியங்கள் வழங்கப்பட்டது. அ.தி.மு.க மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், கலைப்பிரிவு நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முருகன், சவுந்தரம் பங்கேற்றனர். பாரத மைந்தர்கள் பண்பாட்டுக் கழக அமைப்பாளர் லட்சுமணன், தலைவர் சேகர், துணைத்தலைவர் கண்ணன், செயலாளர் அக்பர்அலி, பொருளாளர் காத்துன்பிவி, நிர்வாகிகள் சுப்புலட்சுமி, ஜனனி, சாகுல்ஹமீது, தஸ்லிமாநஸ்ரின் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.