ADDED : பிப் 26, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர், டி.கல்லுப்பட்டி, அத்திபட்டி, சாப்டூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு, கேக்குகள், முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் உள்ளது.
இவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதில் உணவுப் பொருள் எப்போது தயாரிக்கப்பட்டது, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடாமல் பெயரளவுக்கு உள்ளது.
அதிக செயற்கை நிறமூட்டிகள், அஜினோமோட்டோ கலப்பட பொருட்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ள தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை ஆர்வமாக வாங்கி உண்ணும் மாணவர்கள் முதல் முதியோர் வரை உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
