/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு காங்கேயத்தில் கடைகளுக்கு அபராதம்
/
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு காங்கேயத்தில் கடைகளுக்கு அபராதம்
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு காங்கேயத்தில் கடைகளுக்கு அபராதம்
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு காங்கேயத்தில் கடைகளுக்கு அபராதம்
ADDED : டிச 01, 2024 01:49 AM
உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
காங்கேயத்தில் கடைகளுக்கு அபராதம்
காங்கேயம், டிச. 1-
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுச்சாமி, கோடீஸ்வரன் மற்றும் ரமேஷ் அடங்கிய குழுவினர், காங்கேயத்தில் பேக்கரி, அசைவ மற்றும் சைவ உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம், 18 கடைகளில் சோதனை நடத்தினர். அதில் காலாவதி குடிநீர் பாட்டில், 60 லிட்டர், செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட, ௧௨ கிலோ கார வகை, கெட்டுப்போன 6 கிலோ அளவிலான இறைச்சி பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் சுகாதார குறைபாடுள்ள கடைகள், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்திய, 11 கடைகளுக்கு தலா, ௧,௦௦௦ ரூபாய் என, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
உணவு தயாரிக்க தரமான மூலப்பொருட்களை வாங்க வேண்டும். அசைவ மூலப்பொருட்களை அன்றாட தேவைக்கு தகுந்தாற் போல் வாங்கவும் அறிவுறுத்தினர். உணவுப்பொருள் கையாளுபவர்கள் தன் சுத்தம் கடைபிடிக்கவும் கையுறை மற்றும் தலையுறை அணியவும் வலியுறுத்தினர். உணவுப்பொருள் தொடர்பான புகார்களை, 94440-42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறினர்.