தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை வனக்கோட்டத்தில் காட்டுத்தீ விழிப்புணர்வு வார விழா

 மதுரை வனக்கோட்டத்தில் காட்டுத்தீ விழிப்புணர்வு வார விழா

 மதுரை வனக்கோட்டத்தில் காட்டுத்தீ விழிப்புணர்வு வார விழா


ADDED : பிப் 16, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் காட்டுத்தீ விழிப்புணர்வு வார விழா நடந்தது.

வறண்ட வானிலை, காடுகளில் காய்ந்த இலைச் சருகுகளின் குவியல், அதிகரித்து வரும் வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி முதல் ஏப்ரல் காலங்களில்காட்டுத்தீ அதிகம் பரவுகிறது. இதனால் வனப்பகுதிகள் தீவிபத்துகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விபத்துகள் மனித செயல்பாடுகளால் ஏற்படுகின்றன. அதனை தடுக்க விரிவான விழிப்புணர்வு, காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கோட்டத்தில் 26 ஆயிரத்து 795.505 எக்டேர் வனப்பரப்பில், 2,673.72 எக்டேர் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன. கோடை வெப்பம், மின்னல், மரங்களுக்கு இடையிலானஉராய்வு உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், முகாம் தீ, சிகரெட் துண்டுகள், விவசாய கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட மனித காரணங்களாலும் தீ விபத்து ஏற்படுகிறது.

நடவடிக்கை இதனை எதிர்கொள்ள மதுரை சரகத்தில் 10 கி.மீ., சோழவந்தான் சரகத்தில் 20 கி.மீ., உசிலம்பட்டி சரகத்தில் 27 கி.மீ.,க்கு காப்புக் காடுகளில் தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விபத்துகளை உடனுக்குடன் கட்டுப்படுத்த, பாதிப்பு வாய்ப்புள்ள வனப் பகுதிகளில் தீ கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊதுகுழல், கையடக்க புல் வெட்டும் கருவி, மண்வெட்டி, முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கவசம், பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்கள் காட்டுத் தீயை அணைக்க வழங்கப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு பிப். 7 முதல் 14 வரை பாலமேடு, வலையப்பட்டி, ஏ.கோவில்பட்டி, உசிலம்பட்டி, யு.வாடிப்பட்டி, குட்லாடம்பட்டி, டி.கொழிஞ்சிப்பட்டி, வாடிப்பட்டியில் பொதுமக்கள், மாணவர்களுக்கு காட்டுத்தீ விழிப்புணர்வு, தடுக்கும் பயிற்சி, அளிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலகத்தில் தீயணைப்பு துறையுடன் இணைந்து வனப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''காட்டுத்தீயை தடுத்து, வனப்பகுதி, வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகளுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். 0452 - 2534 253ல் காட்டுத்தீ குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதன் மூலம் இயற்கையை பாதுகாக்க முடியும்'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us