/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதான கரன்ட் பில் என்னாச்சு முன்னாள் அமைச்சர் கேள்வி
/
ஜல்லிக்கட்டு மைதான கரன்ட் பில் என்னாச்சு முன்னாள் அமைச்சர் கேள்வி
ஜல்லிக்கட்டு மைதான கரன்ட் பில் என்னாச்சு முன்னாள் அமைச்சர் கேள்வி
ஜல்லிக்கட்டு மைதான கரன்ட் பில் என்னாச்சு முன்னாள் அமைச்சர் கேள்வி
ADDED : டிச 19, 2024 05:08 AM
அலங்காநல்லுார்: 'ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கரன்ட்  பில் கட்டாத தி.மு.க., அரசு' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தி.மு.க.,வை விமர்சனம் செய்தார்.
சமயநல்லுாரில் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்து பேசியதாவது: கடந்த சட்டசபைத் தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எதையும் நிறைவேற்றவில்லை. அலங்காநல்லுார் பகுதியில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து அதற்கு கருணாநிதி பெயரை சூட்டினார். அந்த மைதானத்தால் எந்தப் பயனும் இல்லை.
அந்த மைதானத்திற்கு ரூ.8.66 லட்சம் மின் கட்டண  பாக்கியுள்ளது. கருணாநிதி பெயரில் உள்ள மைதானத்திற்கு கரண்ட் பில் கட்ட கூட யோக்கியதை இல்லாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது. அது மக்களை எப்படி காப்பாற்றும். அ.தி.மு.க.,வை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. இது தொண்டர்கள் கட்சி என்றார்.