ADDED : மார் 30, 2026 07:53 PM
மேலுார்: மேலுார் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழரசன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
மேலுார் பதினெட்டாங்குடியை சேர்ந்தவர் தமிழரசன். மதுரை புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர். இவர் 2011 ல் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவரது மகன் திவாகர் மேலுார் நகராட்சி 23 வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். தமிழரசன் தம்பி பொன்னுச்சாமி மேலுார் தெற்கு ஒன்றிய செயலாளர்.
மேலுார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட இரண்டு தடவை விருப்ப மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து இருமுறை வென்ற பெரிய புள்ளானுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து நேற்று சென்னை அறிவாலயம் சென்ற தமிழரசன், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் தி.மு.க., வில் இணைந்தார். தமிழரசன் ஏற்கனவே மதுரை கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
