நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், இலக்கிய மன்ற துவக்க விழா, தமிழ் உயராய்வு மையத் தலைவர் டயானா கிறிஸ்டி தலைமையில் நடந்தது. மாணவி வர்ஷினி வரவேற்றார். தொல்காப்பியர் மன்ற நிறுவனர் இருளப்பன், 'மானுடம் போற்றும் நன்னெறிகளும் மதிப்புகளும்' என்ற தலைப்பில் பேசினார்.
மாணவி சரிதா நன்றி கூறினார். மாணவிகள் ஐஸ்வர்யா, ரம்யா தொகுத்து வழங்கினர். பேராசிரியர்கள் அருள் மைக்கேல் செல்வி, சூசை ஜெஸிந்தா மெர்சி ஒருங்கிணைத்தனர்.

