ADDED : பிப் 01, 2026 06:21 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மீனாட்சி சேமிப்பு சிட்பண்டு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக எச்.எம்.எஸ்.,காலனி பழனிசாமி, அவரது மனைவி இசக்கி நாச்சியார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டம் (டான்பிட்) மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி ஜோதி பிறப்பித்த உத்தரவு: பழனிசாமி, இசக்கி நாச்சியாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.1 லட்சத்து 6000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விரைவில் தண்டனை வாங்கி கொடுத்த டி.எஸ்.பி., சேகரன், இன்ஸ்பெக்டர் கமர்னிஷா, எஸ்.ஐ.,க்கள் ஆறுமுகம், ஜெயபாலனை அதிகாரிகள் பாராட்டினர்.
