/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி
/
மணமான அக்கா காதலன் கொலை தலையை துண்டித்த தம்பி
ADDED : பிப் 01, 2024 01:52 AM

திருமங்கலம்:மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்த நந்திபெருமாள் மகன் சதீஷ்குமார், 28, கட்டடங்களுக்கு கம்பி கட்டும் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் அழகுமலை மகள் மகாலட்சுமி, 23. இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாலட்சுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரே வாரத்தில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோர் வீட்டிற்கு மகாலட்சுமி திரும்பி வந்து விட்டார்.
அதன் பின், தொடர்ந்து சதீஷ்குமாரிடம் போனில் பேசி வந்தார். இதை மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், 20, கண்டித்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றபோது, அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அரிவாளால் பிரவீன்குமார் வெட்டியதில் தலை துண்டானது.
துண்டித்த தலையை ஊர் மந்தை மேடையில் பிரவீன்குமார் வைத்தார். அப்போதும் ஆத்திரம் குறையாதவர் வீட்டிற்கு சென்று, மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தடுத்த தாய் சின்ன பிடாரியின் கையை துண்டாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.