ADDED : ஜன 11, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில், 267 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது.
அமைச்சர் தியாகராஜன் வழங்கி பேசுகையில், ''பிற மாநிலங்களில் இல்லாத வகையில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்குகிறது'' என்றார். முதன்மை கல்வி அலுவலர் தயாளன், கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் மோகன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கவுன்சிலர்கள் ஜென்னி யம்மாள், பாண்டிச்செல்வி, தலைமை ஆசிரியர் அய்யர் உட்பட பலர் பங்கேற்றனர்.

