/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ
/
ஆதரவற்ற பெண்களுக்கு இலவச மின் ஆட்டோ
ADDED : அக் 06, 2024 03:32 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ரோட்டரி மாவட்டம் - 3000 சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு இலவச மின் ஆட்டோக்களை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மதுரை ரோட்டரியின் முதல் பெண் ஆளுநர் ஆனந்த ஜோதியின் முயற்சியால் தமிழகத்தின் 8 வருவாய் மாவட்டங்களில் இருந்து 50 பெண்களுக்கு ரோட்டரி சார்பிலும் ரோட்டரியின் வருங்கால இயக்குநருமான முருகானந்தம் பங்களிப்புடன் இலவச மின் ஆட்டோ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையில் பிளாசம், சென்ட்ரல், வடமேற்கு, மேற்கு, உசிலம்பட்டி, இளைஞர் அமைப்பான பெர்செப்ட்டாஸ் எனும் 6 ரோட்டரி சங்கங்கள் மூலம் மாவட்டத்தில் இருந்து தகுதியான நபர்கள் கண்டறியபட்டு மின் ஆட்டோ வழங்கப்பட்டன.
ரோட்டரி அறக்கட்டளை முன்னாள் ஆளுநர் ஆனந்த ஜோதி, ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, தலைவர் குமரப்பன், ஆர்.டி.ஓ., சிங்காரவேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.