ADDED : மார் 03, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ரெட்டி நலச்சங்கம், கிருஷ்ணன் கோவில் கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள் சீதாராமன், சீனிவாசன், வழக்கறிஞர் செல்வக்குமார், சரவணன், பாலாஜி, பொருளாளர் ரெங்கப்பரெட்டி, துணைச் செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் விஜயன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ராஜா பூர்ணசந்திரன் துவக்கி வைத்தார். மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
