தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச பரிசோதனை இன்று நிறைவு

 மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச பரிசோதனை இன்று நிறைவு

 மதுரை பிரீத்தி மருத்துவமனையில் இலவச பரிசோதனை இன்று நிறைவு


ADDED : ஏப் 26, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை உத்தங்குடி பிரீத்தி மருத்துவமனையில் இரைப்பை, கல்லீரல் இலவச பரிசோதனை முகாம் இன்றுடன் (ஏப்.,26)நிறைவடைகிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.

சேர்மன் டாக்டர் சிவக்குமார், இரைப்பை குடல், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ் மணி கூறியதாவது:

இம்மருத்துவமனை சார்பில் 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலருக்கும் இலவச பரிசோதனை நடந்து வருகிறது.

முகாமில் முழுமையான ரத்த பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு, தொற்று, கொழுப்பு பரிசோதனை இடம்பெற்றுள்ளது. வயிறு தொடர்பானவற்றுக்கு அல்ட்ரா சவுண்ட் பைப்ரோ ஸ்கேன்கள், புரோக்டோஸ்கோபிகள் போன்ற உயர்நிலை நடைமுறைகளும் தகுதியுள்ளவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர்.

இதில் 250 பேருக்கு இரைப்பை குடல், கல்லீரல் பிரச்னை இருக்கலாம் என கண்டறியப்பட்டது. மதுரையில் முதன்முறையாக கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் பைப்ரோஸிஸ் கண்டறிய நுாற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு இலவச பைப்ரோஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

பிரீத்தி மருத்துவமனையில் மேம்பட்ட இரைப்பை - குடல், கல்லீரல் நோய்களுக்கான மையமாக விளங்குகிறது.

இங்கு சிறப்பு லேப்ராஸ்கோபிக் வசதிகள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான பிரத்யேக பிரிவு உள்ளிட்ட வலுவான உட்கட்டமைப்பு உள்ளது.

வாழ்க்கை முறை தொடர்பான செரிமான பிரச்னைகள் உயிருக்கு ஆபத்தான நிலையை அடைவதற்கு முன்பே கண்டறிய இதுபோன்ற பரிசோதனைகள் அவசியம். மே மாதத்தில் உடல் பருமன் தொடர்பான இலவச பரிசோதனை முகாம் நடத்த உள்ளோம் என்றனர்.

தலைமை இயக்க அதிகாரி ஜாகீர், டாக்டர்கள் அபு, வசந்தபிரியன், ராஜா, சபரிராஜன், செந்தில்குமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us