/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துரித உணவு தயாரிக்க இலவச பயிற்சி முகாம்
/
துரித உணவு தயாரிக்க இலவச பயிற்சி முகாம்
ADDED : அக் 22, 2024 05:10 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் நவ. 6ல் துவங்குகிறது.
காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை 10 நாட்கள் நடக்கும் முகாமில் 18 முதல் 45 வயதுள்ள இருபாலர், திருநங்கையர் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பம் உள்ளோர் நவ. 5க்குள் 94456 00561ல் அல்லது mdu.rudset@gmail.com, www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்ய வேண்டும்.
பயிற்சிக்கு வருவோர் ஆதார், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலையில் உள்ள குடும்பத்தினர், கிராமப்புறத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராசாரி தெரிவித்தார்.