UPDATED : நவ 11, 2026 05:44 PM
ADDED : நவ 11, 2026 05:40 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எய்ம்ஸ் மருத்துவமனை மெயின் ரோடு ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக மருத்துவமனை எதிரில் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் துரித உணவு தயாரிப்பு இலவச பயிற்சி முகாம் நவ. 16ல் துவங்கி 12 நாட்கள் நடக்கவுள்ளது.
பயிற்சி காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். பங்கேற்பாளர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். 18 முதல் 50 வரை இருபாலரும் பங்கேற்கலாம். விரும்புவோர் 96262 46671ல் நவ. 15க்குள் முன்பதிவு செய்யலாம். நேரடியாகவும் பயிற்சியும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சிக்கு வருவோர் ஆதார், ஸ்மார்ட் கார்டு, 100 நாள் வேலை திட்டபணியாளர் எனில் அடையாள அட்டை, கல்வி, ஜாதி, வங்கி புத்தகம் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வர வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணியாளர் குடும்பத்தினருக்கு முன்னுரிமை உண்டு என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
