நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: டிச. 10- -: மதுரை பெட்கிராட், அப்டீன் சார்பில் திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகரில் 60 நாள் ஆரி எம்பிராய்டரி ஜர்தோஷி இலவச பயிற்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராமன் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். அப்டீன் முதுநிலை இயக்குனர் மகேஸ்வரன் சமுத்திரம் குத்து விளக்கேற்றினார். மேலாளர் திவ்யா மெரினால் பேசினார். 30க்கு மேற்பட்ட பெண்களுக்
கு முதுநிலை இயக்குனர் சவுந்தர் அருணாச்சலம் உபகரணங்கள் வழங்கினார். சரஸ்வதி பயிற்சி அளிக்கிறார். பெட்கிராட் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, துணைத் தலைவர் சுசீலா குணசீலி முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.

