ADDED : நவ 28, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு அறிவித்த இலவச திருமணம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான 4 கிராம் தங்கம், பட்டுச் சேலை, வேஷ்டி, பட்டுச் சட்டை, கட்டில், பீரோ, டிவி, பிரிட்ஜ், பூஜை, வீட்டு உபயோகப் பொருட்களை அவரது செலவில் சீதனமாக வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
அறங்காவலர்கள் பொம்ம தேவன், ராமையா, துணை கமிஷனர் சூரியநாராயணன் கலந்து கொண்டனர். துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பாலாஜி சார்பில் மணமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.