ADDED : மார் 03, 2026 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில், தெய்வ நெறிக் கழகம் அமைந்துள்ள சிவானந்த ஆசிரமத்தில், மே 4 முதல் ஜூலை 2 வரை இலவச யோக - வேதாந்த பயிற்சி முகாம் நடக்கவுள்ளது.
மதுரை கிளைத்தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தா கூறுகையில், ''வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்பதால் சரளமாக ஆங்கிலம் எழுத, படிக்கத் தெரிந்த, பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்ளக் கூடிய, ஆரோக்கியமுடைய, 20 முதல் 65 வயது ஆண்கள் பங்கேற்கலாம்'' என்றார். விவரங்களுக்கு 98947 45240ல் தொடர்பு கொள்ளலாம்.

