ADDED : ஏப் 15, 2026 06:59 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் மே 5 முதல் ஜூன் 3 வரை பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச கோடைகால யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை காலை 10:30 முதல் 11:30 மணி வரை பெண்களுக்கும், மாலை 4:30 முதல் 5:30 மணி வரை இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோர் ஏப். 30க்குள் 73050 11060 ல் முன்பதிவு செய்யலாம் என மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.
